Friday, January 1, 2010

முடி கருக‌ருன்னு வ‌ள‌ர‌னுமா:


த‌லை முடி க‌ருப்பாக‌ இருக்க‌னும்னா, நெற‌ய‌ புர‌த‌ம், இரும்புச‌த்து இருக்கிற‌ உண‌வுக‌ளை சேர்த்துக்க‌னும். செம்ப‌ட்டை முடிக்கு பார்ல‌ரில் என்ன‌ சிகிச்சை :1. த‌லையில் ந‌ல்லா எண்ணெய் த‌ட‌விட்டு, ம‌ருதாணி, பெரிய‌ நெல்லிக்காய் ஜூஸ், டீ டிகாஷ‌ன், முட்டையோட‌ வெள்ளைக்க‌ரு இத‌யெல்லாம் சேர்த்து செஞ்ச‌ பேக்‍ஐ ரெடியா வ‌ச்சிக்குவாங்க‌.2. த‌லைல ந‌டுல இருந்து கொஞ்சம் முடியை எடுத்து த‌லைமுடில‌ ந‌ல்லா ப‌டுற‌ மாதிரி த‌ட‌வுவாங்க‌.3. இப்டி கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா வ‌ல‌துப‌க்க‌மும், இட‌து ப‌க்க‌மும் இந்த‌ பேக்‍ஐ முடில‌ த‌ட‌வி சுத்துவாங்க‌.4. கொஞ்ச‌ நேர‌த்துக்கு அப்ற‌மா, த‌லை முடியை த‌ண்ணீல‌ அல‌சுவாங்க‌. க‌ன்டிஷ‌ன‌ர் போட்டு ஒருத‌ட‌வை அலசுவாங்க‌.5. ஹேர் டிரைய‌ரால உல‌ர்த்துவாங்க‌. தொட‌ர்ந்து இந்த‌ மாதிரி செஞ்சுட்டு வ‌ந்தா, முடி க‌ருக‌ருன்னு ஆயிரும்.
இதுக்கு வீட்டில் என்ன‌ சிகிச்சை :1. தேங்காய் பால் கூட‌ க‌ருவேப்பிலையை ந‌ல்லா ம‌சிய‌ அரைச்சி, அதை த‌லையில‌ ஊற‌ வைச்சு, அப்ற‌மா த‌லைமுடியை அல‌சிருங்க‌ ! இதை தொடர்ந்து செஞ்சிட்டு வ‌ந்தா த‌லை முடி க‌ருக‌ருன்னு பளப‌ள‌ப்பா இருக்கும்.2. க‌றிவேப்பிலை, பெரிய‌ நெல்லிக்காய் ரெண்ட‌யும் த‌ண்ணீர் விட்டு மையா அரைச்சு, அதில‌ இருந்து ஜூசை எடுக்க‌னும். ஒரு த‌ம்ள‌ர் ஜூசுக்கு ஒரு ட‌ம்ள‌ர் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அடுப்பில‌ வ‌ச்சு காய்ச்சனும். ப‌ச்சை க‌ல‌ர்ல‌ ந‌ல்லா காய்ஞ்ச‌ எண்ணெய் ந‌ம்ம‌ளுக்கு கிடைக்கும். இதை த‌லையில‌ தொடர்ந்து த‌ட‌விட்டு வ‌ந்தா , முடி க‌ருக‌ருன்னு மாறுற‌தோட‌ ந‌ல்லா வ‌ள‌ர‌வும் செய்யும்.

1 comment: